Get help as a refugee - Tamil

ஓர் அகதி எல்லது புகலிடம் தேடுபவர் என்ற வகையில் உதவி பெறுங்கள்

நீங்கள் ஓர் அகதியாக ,புகலிடம் தேடுபவராக அல்லது பலவீனமான குடிபெயர்பவராக இருந்தால், பிரித்தானியச் செஞ்சிலுவைச் சங்கத்தால் உங்களுக்கு உதவ இயலுமாகக்கூடும்.

நாங்கள் எவ்வாறு உதவலாம்

நாம் அகதிகளினதும் புகலிடம் தேடுவோரினதும் ஏனைய பலவீனமான குடிபெயர்வோரினதும் அவசரத் தேவைகளில் உதவி வழங்குகிறோம். நாம் வழங்க முடிகின்ற உதவி, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதில் தங்கியிருக்கும் .அதில் உள்ளடங்கக்கூடியன:

  • உணவுப் பொதிகளும் சான்றுச் சீட்டுக்களும்
  • சிறு தொகைப் பணம்
  • ஆடைகள்
  • ஒப்பனைப் பொருட்கள்
  • போர்வைகள்கு
  • ழந்தைகளுக்கான பொருட்கள்.

நாம் மேலதிக உதவி வழங்க இயலுமாகக்கூடும் .உங்களது சூழ்நிலைகளையும் நீங்களஎங்கவசிக்கிறீர்கள் என்பதையும் பொறுத்து இதில் உள்ளடங்கக்கூடியன:

  • பயணச் சான்றுச் சீட்டுக்கள்
  • நலன்களும் தொழில் ஆலோசனையும்
  • சுகாதாரப் பராமரிப்பு – பொது மருத்துவரிடம் அல்லது பல் மருத்துவரிடம் பதிவு செய்தல்
  • முன்பதிவுகளுக்கு உங்களுடன் வருதல்
  • ஐக்கிய இராச்சியத்தில் வாழ்க்கையைச் சரிக்கட்டுதல்
  • ஆற்றுப்படுத்துதல் – உங்களது உள்ளூர்ப் பகுதியை அறிந்து கொள்ளல்
  • உணர்வு தொடர்பான ஆதரவு
  • குடும்பத்துடன் மீளிணைதல்
  • ஏனையோரைச் சந்தித்தல்.

உங்களது ஆக அண்மையிலுள்ள அகதிச் சேவையைக் கண்டு கொள்ளுங்கள்

நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளும் போது, நாம் உதவ முடியுமாவெனப் பார்க்க எமது பயிற்றப்பட்ட விடய வேலையாட்களில் ஒருவர் உங்களது தேவைகளைக் கணிப்பீடு செய்வார். எம்மால் இயலாவிடின், இயலுமான ஒரு சேவையை நாம் உங்களுக்குப் பரிந்துரைப்போம் அல்லது வழி காட்டுவோம்.

உங்களால் ஆங்கிலம் பேச முடியாவிடின் நாம் ஓர் உரைபெயர்ப்பாளரை வழங்குவோம்.

நாம் அரசியல் அல்லது சமயம் சார்ந்தோரல்லர், நாம் உங்களை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுக்க மாட்டோம், எமது உதவி இலவசமானதும் இரகசியங் காப்பதுமாகும்.

உங்களது உள்ளூர்ச் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது

நீங்கள் எங்களது உதவியை எவ்வாறு பெறுகிறீர்கள் என்பது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதில் தங்கியிருக்கிறது .பின்வருமாறாயின், உங்களது ஆக அண்மையிலுள்ள அகதிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • நீங்கள் உள் நுழைகிறீர்கள் (அது ஒரு கொண்டு சேர்க்கும் நிலையமாக இருந்தால்)
  • நீங்கள் ஒரு முன்பதிவைச் செய்கிறீர்கள்நீ
  • ங்கள் மற்றொரு நிறுவனத்திலிருந்து பரிந்துரைக்கப்பட வேண்டியிருக்கிறீர்கள்.

நீங்கள் முன்னர் இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளீர்களா? எமக்கு உங்களது [பின்னூட்டத்தை] (feedback form) வழங்குங்கள்

நீங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்களாயின்நீ

ங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்ட ஓர் அகதியாக அல்லது புகலிடம் தேடுபவராக இருப்பின் நாம் உங்களுக்கு உதவ இயலுமாகக்கூடும்.

ஓர் அகதி என்ற வகையில் நீங்கள் பெறும் உதவியைப் போன்றே, நீங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பின் அடுத்து என்ன செய்ய வேண்டும், இன்னும் எங்கு உதவி பெறலாம் என்பவற்றைப் பற்றிய ஆதரவும் ஆலோசனையும் கூட நாம் வழங்கலாம்.

இளம் அகதிகளுக்கான உதவி

நீங்கள் 15 முதல் 25 வயது வரையான ஓர் அகதியாக இருந்தால் நீங்கள் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளில் உதவி பெறலாம்.

ஓர் இளம் அகதி என்ற வகையில் உதவி பெறுங்கள்

குடும்ப மீளிணைவு (குடும்பத் தொடர்புகளை மீளமைத்தல்)

நீங்கள் ஓர் அகதியாக இருந்தால் நாம் பின்வருவனவற்றின் மூலம் உங்களுக்கு உங்களது குடும்பத்துடன் மீளிணைய உதவ இயலுமாகக்கூடும்:

  • விசா விண்ணப்பங்கள் தொடர்பில் உதவுதல்உ
  • ங்களது குடும்பம் உங்களுடன் சேர விமானப் பயணங்களை ஏற்பாடு செய்தல் (குடும்ப மீளிணைவுப் பயண உதவி).

நாம் ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகளில் மாத்திரம் குடும்ப மீளிணைவு விசாக்களுக்கு விண்ணப்பிப்பதில் உதவி வழங்க இயலும் எனும் அதே வேளை, ஒரு காத்திருப்புப் பட்டியல் இருக்கக்கூடும்.

அவர்கள் குடும்ப மீளிணைவு உதவி வழங்குகிறார்களாவெனக் கண்டு கொள்ள உங்களது [உள்ளூர்ச் சேவை] (அகதிச் சேவைப் பட்டியலிடல் தேடலுக்கான இணைப்பு) -ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.

குடும்ப மீளிணைவுக்கான பிரித்தானியச் செஞ்சிலுவைச் சங்க வழிகாட்டலை வாசியுங்கள்.